Skip to content

உங்களின் புதிய தொழிலை தொடங்கும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய 10 விசயங்கள்

  • kavini 

செயல்படுத்தும் விதத்தில்தான் எல்லாம் இருக்கிறது

உங்கள் ஐடியா சிறந்ததாக இருக்கலாம். ஆனால்  அதை நீங்கள் எப்படி செயல்படுத்துவது (execution) என்ற தெளிவான பார்வை இல்லையென்றால் உங்கள் ஐடியா தோல்வியடைந்து போகும்.

வெற்றியை பெறும் முன் பல தோல்விகளை சந்திக்கவேண்டியது வரும்

நீங்கள் வெற்றி அடைவதற்கு நீண்ட காலம் ஆகலாம். வெற்றிகள் பெரும்பாலும் பல தோல்விகளுக்கு பிறகே கிடைக்கும். நாம் வெற்றி மற்றும் தோல்வி இரண்டுக்குமே நம்மை தயார் படுத்திக்கொள்ளவேண்டும்.

உங்கள் பொருட்கள், சேவைகள் வாடிக்கையாளர்களுக்கு தேவைதானா என்று தெரிந்துகொள்ளவேண்டும்

நமக்கு பல வித்தியாசமான ஐடியாக்கள் இருந்தாலும் அது வாடிக்கையாளர்களுக்கு தேவைதானா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். நாம் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க தீர்வுகள் கண்டுபிடித்தாலும், உண்மையில் அந்த தீர்வுகள் அவர்களுக்கு தேவைதானா என்பதை புரிந்துகொள்ள வேண்டும் (we are building startups that want to solve a problem that probably doesn’t need solving).

சிறந்த ஊழியர்களை கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல

சிறந்த ஊழியர்கள்தான் ஒரு நிறுவனத்தின் பலம். தொழில்முனைவோருக்கு சிறந்த தொலைநோக்கு பார்வை இருந்தாலும் அதை  செயல்படுத்த சிறந்த ஊழியர்கள் (better employee’s) தேவை. சிறந்த ஊழியர்களை கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல. இதை நாம் தெரிந்து கொள்ள  வேண்டும்.

உங்களை விட திறமையான ஊழியர்களை வேலையில் சேர்க்க உங்கள் மனம் இடம்கொடுக்காது

ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி திறமையான ஊழியர்களால்தான் கட்டமைக்கப்படுகிறது. எனவே நீங்கள் உங்களை விட திறமையான ஊழியர்களை (better than you) வேலைக்கு தேர்ந்தெடுக்க தயங்க கூடாது.

இல்லை என்ற வார்த்தை பல நேரங்களில் உங்கள் காதுகளில் விழுந்துகொண்டே இருக்கும்

முதலீட்டை பெறுவது, வாடிக்கையாளர்களை வாங்க வைப்பது போன்ற பலவற்றில் இல்லை என்ற வார்த்தையை கேட்க வேண்டிவரும். பலபேரை இணங்க வைக்க நாம் பலநேரங்களில் இல்லை என்ற வார்த்தையை கேட்க தயாராக இருக்கவேண்டும். 

தகவல்கள் மிகவும் முக்கியம்

நீங்கள் எடுக்கும் முடிவுகள் நீங்கள் கொண்டிருக்கும் தகவல்களையும் (information), விவரங்களையும் (details) பொறுத்தே அமையும். உங்கள் துறையில் அதிகபட்ச தகவல்களை கொண்டீர்கள். கற்றுக்கொள்வதற்கு (learning) அதிகமாக செலவிடுங்கள். தொடர்ந்து கற்றுக்கொண்டேயிருங்கள். 

மன அழுத்தம் தாங்க முடியாத இருக்கலாம்

போட்டி, சந்தையில் தேவைகள் குறைவது, லாபம் மற்றும் வருமானம் குறைவது, முதலீட்டளர்கள் கொடுக்கும் அழுத்தம் போன்ற பல காரணங்களால் மன அழுத்தம் (stress) ஏற்படலாம். அது எல்லாவற்றையும் எதிர்கொள்ள உங்கள் மனதை தயார்படுத்தி கொள்ளவேண்டும்.  

சொந்த வாழ்க்கை பாதிப்பு அடையலாம்

நீங்கள் தொழிலில் எடுக்கும் முடிவுகள் எந்தவிதத்திலும் உங்கள் சொந்த வாழ்க்கையில் (personal life) பாதிப்பு ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கைக்கும் இடையே தெளிவான கோட்டை வரையறுக்க வேண்டும். வாழ்க்கை சமநிலையை (life balance) பின்பற்றவேண்டும்.

பலமுறை தொழிலை விட்டு  வெளியேற தோன்றும்

எல்லாம் நமக்கு சாதகமாக சென்றுகொண்டிருக்கும் போது நமக்கு நேர்மறை எண்ணங்களே ஆக்கிரமித்திருக்கும். ஆனால் எதிர்மறையாக செல்லும் பட்சத்தில் பெரும்பாலான தொழில்முனைவோருக்கு அதிலிருந்து வெளியேறும் (give up) எண்ணமே தோன்றும். வெளியேறும் எண்ணம் உள்ளவர்கள் தொழிலில் வெற்றி அடைந்ததில்லை. எந்த நிலையிலும் விடாமல் முயற்சி செய்தவர்களே வெற்றி அடைந்திருக்கிறார்கள்.

Leave a Reply

Contact to us