இந்தியாவில் அனைத்து வங்கி தொடர்பான சேவைகளுக்கு பான் கார்டு தவிர்க்க முடியாததாகும். இந்த பான் கார்டை தொலைத்து விட்டால் வாட்ஸ்அப் மூலம் திரும்ப பெறுவதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.
பான் கார்டு
இந்திய குடிமக்கள் அனைவரும் பான் கார்டு வைத்திருப்பது மிகவும் அவசியமானதாகும். அத்துடன் நாட்டில் வருமான வரி செலுத்துவதற்கு முக்கிய ஆவணமாக பான் கார்டு இருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த பான் கார்டு வருமான வரித் துறையின் கீழ் வழங்கப்படுகிறது. பான் கார்டு என்பது நிரந்தர கணக்கு எண் என்பதன் சுருக்கம் ஆகும். இது 10 இலக்க எண்களை கொண்டது. அத்துடன் வங்கிகளில் ஒரே சமயத்தில் ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் பணத்தை எடுக்கவோ அல்லது பணத்தை செலுத்தவோ வேண்டுமெனில் பான் கார்டு வைத்திருக்க வேண்டும்.
மேலும் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களின் கணக்கு அல்லது பே-சிலிப் ஆகியவற்றுடன் பான் கார்டு இணைத்திருக்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டது. இதையடுத்து இந்த பான் கார்டை வெளியில் செல்லும் போது எடுத்த செல்லவில்லை என்றாலோ அல்லது பான் அட்டையை தொலைத்து விட்டாலோ அதனை வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக பெறலாம்.
1. முதலாவதாக, 96003 48046-க்கு Hi என்று வாட்ஸ்அப் அனுப்பவும்.
2. பான் கார்டு சேவையை பெற, 5 என பதில் அனுப்பவும்.
3. தொலைந்து போன அல்லது சேதம் அடைந்து போன பழைய பான் கார்டுக்கு பதிலாக புதிய பான் கார்டுக்கு 2 என பதில் அளிக்கவும்
அடுத்த 10 லிருந்து 15 நாட்களுக்குள் உங்கள் பான் கார்டு உங்கள் வீட்டு முகவரிக்கு வந்துவிடும்.