புதிதாக ஜிஎஸ்டி பெற்றுள்ளீர்களா? உங்களுக்கான சில தகவல்கள்
ஜிஎஸ்டி ரிட்டர்ன் என்பது என்ன? யாரெல்லாம் இதை செய்யவேண்டும்? மற்றும் இதை செய்யவில்லை என்றால் என்ன ஆகும்.
என்பதை இங்கே தெளிவாக விளக்கபடுகிறது.
ஜிஎஸ்டி ரிட்டர்ன் என்றால் என்ன?
பொதுவான வழக்கத்தில் ‘மாதாந்திர ஜிஎஸ்டி கணக்கு தாக்கல்’ என்பது ‘ஜிஎஸ்டி இ-பைலிங்’ & ‘ஜிஎஸ்டி ரிடர்ன்’ என்று அழைக்கபடுகிறது.
ஜிஎஸ்டி ரிட்டர்ன் என்பது உங்கள் விற்பனை (Sales), கொள்முதல் (Purchase), விற்பனையில் வசூலிக்கப்படும் வரி மற்றும் வாங்குதல்களுக்கு செலுத்தப்படும் வரி ஆகிய அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய ஆவணமாகும். நீங்கள் ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்தவுடன், அரசாங்கத்திற்கு நீங்கள் செலுத்த வேண்டிய வரியை செலுத்த வேண்டும்.
யாரெல்லாம் ஜிஎஸ்டி ரிட்டர்ன் செய்யவேண்டும்?
ஜிஎஸ்டி சர்டிபிக்கேட் வைத்துள்ள அனைவரும் மாதா மாதம் ஜிஎஸ்டி ரிட்டர்ன் செய்வது கட்டாயம்.
ஜிஎஸ்டி சர்டிப்பிகேட் வைத்திருக்கிறேன்… ஆனால் சேல்ஸ்/பர்சேஸ் போன்ற எந்த நடவடிக்கையும் செய்யவில்லை என்கிறீர்களா? நீங்களும் ஜிஎஸ்டி ரிட்டர்ன் செய்ய வேண்டும்.
ஜிஎஸ்டி சர்டிப்பிகேட் வைத்திருக்கிறேன்… ஆனால் இன்னும் வியாபரத்தை / தொழிலை தொடங்கவில்லையா? நீங்களும் ஜிஎஸ்டி ரிட்டர்ன் செய்ய வேண்டும்.
எப்பொழுது இ-பைலிங் செய்ய வேண்டும்?
ஜிஎஸ்டி விதிமுறைகளின்படி, வணிகர்கள் வரும் மாதத்தின் 10வது நாளுக்குள் தங்கள் மாதாந்திர ஜிஎஸ்டி கணக்கினை தாக்கல் செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக, மார்ச் மாதத்திற்கான கணக்கினை ஏப்ரல் 10 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். நிலுவைத் தேதிக்குள் கணக்கினை தாக்கல் செய்யப்படாவிட்டால், தாமதக் கட்டணம் விதிக்கப்படும், இது தாமதமான நாட்களின் எண்ணிக்கை மற்றும் வணிகத்தின் விற்றுமுதல்(Turnover) ஆகியவற்றின் அடிப்படையில் மாறுபடும்.
ஜிஎஸ்டி ரிட்டர்ன் செய்யவில்லை என்றால் என்ன ஆகும்?
ஒரு வணிகமானது தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு ஜிஎஸ்டி கணக்கினை தாக்கல் செய்யத் தவறினால், அதன் ஜிஎஸ்டி பதிவை அதிகாரிகள் கேன்சல் செய்யலாம். இது வணிகம் மற்றும் நம்பகத்தன்மை இழப்பு மற்றும் சட்ட மற்றும் நிதி தாக்கங்களுக்கு வழிவகுக்கும்.
ஒருமுறை கேன்சல் செய்யப்பட்டுவிட்டால், திரும்ப பெறவோ / புதிய ஜிஎஸ்டி நெம்பர் பெற விண்ணப்பிக்கவோ வேண்டுமானால் தாமத கட்டணம், அபராதம் இவைகளை செலுத்தினால் மட்டுமே முடியும்.
எனவே, வணிகர்கள் ஜிஎஸ்டி விதிமுறைகளுக்கு இணங்குவதும், தங்கள் ஜிஎஸ்டி பதிவுக்கான தாமதக் கட்டணம், அபராதம் அல்லது ரத்துசெய்வதைத் தவிர்ப்பதற்கும் சரியான நேரத்தில் தங்கள் கணக்கினை தாக்கல் செய்வது மிகவும் முக்கியம்.